செப்26வெள்ளி மாலை -மங்கள்யான் வெற்றி விழா-சென்னை-

செவ்வாய் தோஷமல்ல, ஆராய்ந்து அறியும் சந்தோஷம்!
மங்கள்யான் வெற்றி விழா!!
இஸ்ரோ உள்ளிட்ட பங்கெடுத்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப சாதனையாளர்களுக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!!

26செப்டம்பர்,2014, மாலை 3,30 மணி முதல் 5 மணி வரை
இடம் : நவபாரத் பதின்நிலைப்பள்ளி,14ஏ,சோலையப்பன் தெரு, தி.நகர்,சென்னை-17; பேருந்து நிறுத்தம் : பெரியார் சாலை
வள்ளுவர் கோட்டத்திலிருந்தும், கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்தும் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
வரவேற்புரை : விக்நேஸ்வரன் கிளைத் துணைச் செயலாளர், TNSF
தலைமை : ஸ்ரீதர், கிளைத்தலைவர்
தொடக்க உரை : உதயன், மாநில நிர்வாகி
ஸ்லைடு ஷோவுடன் மங்கள்யான் வெற்றிப்பயண கருத்துரை:
பேராசிரியர். முருகன் ( முன்னாள் இயற்பியல் துறைத்தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை )
வாழ்த்துரை : பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை )
பி.கிருஷ்ணமூர்த்தி ( மாவட்ட பொருளாளர்)
சி.பி.இராமச்சந்திரன்( மாவட்ட துணைத்தலைவர் )
அறிவியல் பாடல்கள் : மோகனா ( சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்). பூங்கோதை ( மாவட்ட செயற்குழு)
நண்றியுரை : சுகன்யா ( நவபாரத் கிளை )
இந்த நிகழ்ச்சி www.tnsfchennai.com என்ற இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஒருங்கிணைப்பு : சிந்தன் (மாவட்ட செயற்குழு )
இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைகின்றோம்!
இந்த செய்தியினை அனைவரிடமும், அனைத்து விதங்களிலும் பகிருங்கள்! பரப்புங்கள்!! ( முகநூல், குறுங்செய்தி, மின் அஞ்சல்,… )
தொடர்புக்கு : 9444453588, 8056176788
மின் அஞ்சல் :chennaitnsf@gmail.com
முகநூல் : www.facebook.com/chennaitnsf
நிகழ்ச்சி ஏற்பாடு: நவபாரத் மாணவர் கிளை, சென்னை மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

இராமானுஜன் திரைப்பட திறனாய்வு & பாராட்டு விழா!! -தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,திருவான்மியூர் கிளை

tag: 
pic: 

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் - ஆவடி கிளையில் துளிர் இல்லம் தொடக்கம் மற்றும் ஆசிரியர் தின விழா

tag: 
pic: 

மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் பெண்களை பலாத்காரம் செய்யவேண்டும் - என்று கூரிய பத்திரிக்கையாளர் வி.ஆர். பட்டை கண்டித்து கண்டன கூட்டம்

பி.ஜி.வி.எஸ். என்ற அமைப்பு மூடநம்பிக்கைகளை ஒழிக்க நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை என். பிரபா இந்த அமைப்பின் கர்நாடக மாநிலச் செயலாளராக உள்ளார்.

தனது பேஸ்புக் முகவரியில் ராக்கட் ஏவுவதற்கு முன்பு பூஜை செய்வது நியாயமா ? இது தான் அறிவியலா ? என்று பதிவு செய்துள்ளார்.

கர்நாடக நாளிதழ் களில் கட்டுரைகள் எழுதி வரும் மத அடிப்படைவாதி வி.ஆர். பட் என்பவர் “ பிரபா போன்ற பெண்களின் தலைமுடியை பிடித்து தெருவுக்கு இழுத்துவந்து பலாத்காரம் செய்ய வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டித்து விஞ்ஞானிகள் , பேராசிரியர்கள் , ஆசிரியர்கள்- பொது மக்கள் பங்கேற்கும் கூட்டம். நாமும் பங்கேற்ப்போம்.
இடம் :
நவபாரத் பதின் நிலை பள்ளி ,
பெரியார் சாலை பேருந்து நிறுத்தம், தி.நகர். வள்ளுவர்கோட்டம் அருகில்,
( கோடம்பக்கம் ரயில்நிறுத்தத்திலிருந்து 1/2 கி.மி)

நேரம் :
ஆகத்து 9, சனி , மாலை 4.30 மணி - 7 மணி

pic: